கிளி. முறுகண்டி பகுதியில் பாரிய விபத்து!!


 முறிகண்டி பகுதியில் திங்கட்கிழமை இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.


அப்பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனைச்சாவடியில் தரித்து நின்ற வாகனத்துடன் கார் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதேவேளை நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளன.


முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறித்த பகுதியில் சோதனைச்சாவடியில் தரித்து நின்ற வாகனங்களை அவதானிக்காது  பயணித்த கார்,  தரித்து நின்ற வானுடன் மோதியுள்ளது. விபத்துக்குள்ளான வான் முன்னால் தரித்த நின்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி  எதிரே நின்ற டிப்பர் வாகனத்துடன் மோதியுள்ளது.


இதன் போது மோட்டார் சைக்கிளல் தரித்திருந்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்த வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.