ரசிகரின் கேள்விக்கு திமிராக பதிலளித்த லொஸ்லியா!

 


பொதுவாக ஒரு நடிகை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடையும் வரை மட்டும்தான் அவர்களிடம் தொடர்ந்து லைவ் சேட்டில் பேசி அவர்களுக்கு ஐஸ் வைத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொள்வார்கள்.


அதன்பிறகு கொஞ்சம் சினிமாவில் திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்து விட்டால் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கொஞ்சம் திமிராக தான் பதில் அளித்து வருகிறார்கள்.


அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் லாஸ்லியா. இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார் அதன் பிறகு எப்படியாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருந்த இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.


இந்நிகழ்ச்சியில் லாஸ்லியா மற்றும் கவின் காதலைப் பற்றி சொல்லவே தேவையில்லை சினிமாவில் இருக்கும் காதல் அளவிற்கு இருந்ததால் இவர்களுக்கு என்று தனி ஆர்மி உருவானது. இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு திரைப்படங்களிலும், விளம்பரங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.


அந்த வகையில் தற்பொழுது இவர் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து பிரெண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.


சமீபத்தில்கூட இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.   


இவ்வாறு சினிமாவில் பிசியாக இருந்து வரும் இவர் தற்பொழுது கொரோனாவின் தாக்கத்தால் அனைத்து துறைகளும் முடங்கி உள்ளது எனவே தற்பொழுது திரைப் படங்களின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை.


எனவே தற்போது உள்ள அனைத்து நடிகைகளும் போட்டோ ஷூட் நடத்துவது மாதிரி லாஸ்லியாவின் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் நடத்திய தங்களது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.  


ஒரு போட்டோ ஷூட் நடக்க வேண்டும் என்றால் அதற்கு மூன்று முதல் ஐந்து பேர் தேவை இதனை அறிந்த ரசிகர் ஒருவர் கொரோனாவால் பல கோடி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள்.


அதோடு நாம் அனைவரும் அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் இந்நிலையில் போட்டோ ஷூட் எல்லாம் தேவையா என்று லாஸ்லியாவிடம் கேட்டுள்ளார்.  


இதற்கு லாஸ்லியா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் தயவு செய்து உங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை மூடி விட்டு செல்லுங்கள் பின்பு இன்ஸ்டாகிராமில் பதிவிடும் போட்டோக்கள் உங்களுக்கு வராது என திமிராக பதில் அளித்துள்ளதால் ரசிகர்கள் பெரும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.


ஏனென்றால் இவர் தமிழ் ரசிகர்களால் தான் தற்போது இந்த அளவிற்கு சினிமாவில் வளர்ந்து வரும் இதனை மறந்து லாஸ்லியா சினிமாவில் பிரபலம் அடைந்து விட்டோம் என்பதற்காக திமிராக பதில் அளித்து உள்ளார்.   


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.