காத்திருப்பு - பிரபா அன்பு !!

 


ஒரு பூகம்பம் என்னைக் காவுகொண்டதாகவே உணர்கிறேன்

உனதன்பின் சிறகசைப்பில் மகிழ்ந்திருந்த நாட்கள் 

மயிலொன்று தோகைவிரித்த

கணங்கள் போலவே 

எங்கள் சந்திப்பு நிகழாதிருந்திருக்கலாம்

நமக்கான இடைவெளிகள்

இரகசிய குகைவழிப் பாதையைப்போல்

இருள் சூழ்ந்து நீண்டு செல்கிறது 

களிமண்ணால் செய்யப்பட்ட

பொம்மையல்ல நான்

உனதான நேசத்துப் புறக்கணிப்பால் துவண்டுபோயிருக்கும் பாசப்பறவை 

கனவெளியெங்கிலும் பரந்து கிடக்கிறது  

உன் நேசக்கணைகள்

பருவத்தில் பொழியும் மழைபோல்

முழுமதியாய் மனமெங்கும் நிரவிக்கிடக்கிறாய் 

விளக்கின் ஒளிகொண்டு

பூலோக ஏடுகளிலும் 

கலியுகத்தின் சாலைகளிலும் 

உன் பாசமொழியை பொறித்து வைத்துள்ளேன் 

சிறுகச் சிறுக சேமித்த  தேன்துளி

பெரும்சுழலில் சிக்குண்டு சிதறுண்டு போனதுபோல் 

பாதி கரைசேர முன்பு துடுப்பும் தவறியது 

கருவண்டின் மெல்லிய சிறகசைப்பில்

வரும் சத்தம்போல்

உன் இதயத்து மாயவனத்துக்குள் சென்று

இனிய கானம் ஒன்று பாடுகிறேன் 

வீதியெங்கும் நிறைந்திருக்கும்

முட்களைப் பொறுக்கி

வெள்ளைப் பூக்களோடு உனக்காக காத்திருக்கிறேன்

கோபத்தைவிடுத்து வந்துவிடு

வாகாய் இணைந்து பாசமாய் இருப்போம்.....

💕பிரபாஅன்பு💕Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.