இலங்கை ஆபத்தான நிலையில் - அதிகாரிகள் கவலை!


 கொவிட் முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளை விட தற்போது பரவும் மூன்றாம் அலை தொடர்பான ஆய்வக அறிக்கையை பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இது கவலைக்குரிய விடயம் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.


எனவே ஆய்வக அறிக்கைகளை விரைவில் பெற்றுக்கொடுக்க முறையான திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


ஆய்வுகூட அறிக்கைகளின் ஊடாகவும், நோயாளர்களின் தரவுகளின் ஊடாகவும் பதிவாகும் நிலைமையை விட நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் அபாயமிக்கதும் ஆபத்துமிக்கதுமாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.


இரண்டாம் அலையின் போது இருந்த ஆய்வுகூட தாமதம் தற்போதைய மூன்றாம் அலையின் போதும் உள்ளது. நேற்று 1,500 தொற்றாளர்களை விடவும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகினர்.


தற்போதைய நிலையை கொண்டு எதிர்காலம் தொடர்பில் கூற முடியும். பொது மக்களின் நடமாட்டம் அதிகரித்தமையே தற்போதைய நிலைக்கு காரணம்.


இதேபோல் தொடர்ந்தும் பொறுப்பற்று செயற்பட்டால் நிலைமை மோசமாக மாறும். சமூக இடைவெளியை தொடர்ந்தும் பேணாமல் செயற்பட்டால் நிலைமை மோசமடையும். ஆகவே தேவையற்ற விதத்தில் பொது இடங்களில் நடமாட வேண்டாம். இந்த நிலைமை தீவிரமடையக்கூடும் என்றார்.


நாட்டில் மேலும் ஆயிரத்து 304 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து , இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து ஒன்பதாயிரத்து 450ஆக அதிகரித்துள்ளது.


இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 503 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்த வெளியேறிய நிலையில், மொத்தமாக 96 ஆயிரத்து 478 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். அத்துடன், கொரோனா தொற்றினால் நாட்டில் இதுவரை 678 பேர் மரணித்துள்ளதுடன் 12 ஆயிரத்து 294 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.