யாழ். கைதடி மக்கள் வங்கி உதவி முகாமையாளரைக் காணவில்லை!!

 


திருகோணமலை - அன்புவளிபுரம் பிரதேசத்தில் 2 வயது மகனுடன் காணாமல் போன தாயாரைப்பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பொது மக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.


நேற்றையதினம் 978/D அம்பாள் வீதி அன்புவளிபுரத்தைச் சேர்ந்த சத்தியபிரதாப் ஆஷா என்ற தாயாரும் 2 வயதுடைய மகனும் மாலை 6.30 மணியளவில் காணாமல் போயுள்ளார்கள்.


இவர் யாழ். கைதடியிலுள்ள இலங்கை வங்கியில் உதவி முகாமையாளராக உள்ளார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


இதனையடுத்து இவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரைப்பற்றி எந்தவிதமான தகவலும் கிடைக்காததையடுத்து உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.


எனவே குறித்த தாயார் குழந்தை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலே அல்லது 0772355828 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவலை வழங்குமாறு அவரது உறவினர்கள் மற்றும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.