நீதிமன்ற தீர்ப்பை மீறி முள்ளிவாய்க்காலில் படையினர் அடாவடி!!

 


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு நீதிமன்ற அனுமதி கிடைத்தபோதும், அப் பகுதிக்கு சென்றவர்களை பொலிசார், இராணுவம் தடுத்து நிறுத்தி வருகின்றதாக கூறப்படுகின்றது.


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த அனுமதிக்கக் கூடாதென தடைவிதிக்க கோரி 27 பேரின் பெயர் குறிப்பிட்டு பொலிசார் மனு தாக்கல் செய்திருந்ததற்கமைவாக கடந்த 13 ஆம் திகதி நீதிமன்று நினைவேந்தலில் ஈடுபட தடையுத்தரவு வழங்கியிருந்தது. இந்த தடையுத்தரவுக்கு எதிராக இன்று நகர்த்தல் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்றது.


இதில், சுகாதார விதிமுறைகளை மீறாமலும், பயங்கரவாத நடவடிக்கைகளை அனுசரிக்காது அஞ்சலியை நடத்த நீதிமன்றம் அனுமதித்தது. அத்துடன், ஏற்கனவே வழங்கிய தீர்ப்பிலும் முள்ளிவாய்க்கால் அஞ்சலிக்கு தடை விதிக்கவில்லையென்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.



இதையடுத்து, பொலிசாரினால் தடையுத்தரவு பெறப்பட்டவர்கள், அரசியல் பிரமுகர்கள் சிலர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு சென்றபோது பொலிசார், இராணுவத்தினர் நினைவாலயத்திற்குள் நுழையக் கூடாதென அவர்களை வழிமறித்தனர். நீதிமன்ற உத்தரவு தமக்கு இன்னும் கிடைக்கவில்லையென பொலிசார் கூறி எவரும் இங்கு வர அனுமதி இல்லை என திருப்பி அனுப்பியுள்ளனர்.


மேலும் நினைவுத்தூபிக்கு செல்லும் அனைத்து பாதைகளிலும் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதுடன் நினைவேந்தல் தூபிக்கு அண்மையாகவும் இராணுவம் நிறுத்தபப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.    


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.