சுவிஸ் அரசின் கொரோனா விதிமுறைகள்!

 


சுவிஸ் கூட்டாட்சி அரசின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்ட முக்கிய கொரோனா விதிமுறைகள் வெளியிடப்படுள்ளது.


உணவகங்கள் 31.05.2021 திகதியில் இருந்து முழுமையாக திறக்கப்படும்.


ஆரோக்கியத்தை பேணக்கூடிய குளியல் தொட்டிகள் 31.05.2021 திகதியில் இருந்து மீள திறக்கப்படும்.


தனியான ஒன்றுகூடல்கள் உள்ளரங்கங்களில் 30 பேருக்கும் வெளி ஒன்றுகூடல்களுக்கு 50 பேருக்கும் 31.05.2021 இருந்து அனுமதி வழங்கப்படுகின்றது.


நிகழ்வுகளில் அதிகளவாக 50 பேர் கலந்துகொள்ளலாம் என்ற நடைமுறையின் கீழ் 31.05.2021 இருந்து நடைமுறைக்கு வருகின்றது.


பொதுவான கலாச்சார, விளையாட்டு, மத நிகழ்வுகள் உள்ளக அரங்குகளில் 100 பேர் வரையிலும் அல்லது இடத்தின் கொள்ளவில் அரை மடங்கும் ஒன்றுகூடலாம். வெளியகமான இடங்களில் 300 பேர் வரையிலும் அல்லது இடத்தில் கொள்ளவில் அரை மடங்கு ஒன்றுகூடலாம்.


நேரடி வகுப்புக்களுக்கான நடைமுறைகளில் எதுவித வரையறைகளும் இல்லை உயர்தர மற்றும் இளம் வயதினருக்கான கல்விகூட வசதிகளில். ( அனுமதி வழங்கப்பட்ட பரிசோதனை நடைமுறைகளின் அடிப்படையில்)

விளையாட்டு போட்டிகள் கலாச்சார போட்டி நிகழ்வுகளில் பார்வையாளர்களின் அளவு 50 பேர் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


இரவு நடன விடுதிகள் மற்றும் மதுபானசாலைகள் தொடர்ந்தும் மறு அறிவிப்பு வரை மூடப்பட்டிருக்கும். பெரிய அளவிலான நிகழ்வுகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ளது.


அலுவலகங்களில் நடைமுறைக்கு இணங்க Home office நடைமுறை பின்பற்றப்படும்.


அனைவரும் தேவைகளுக்கு இணங்க சரியான முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டப்படுகிறீர்கள்.


ஏனைய வழமையான கொரோனா எதிர்ப்பு நடைமுறைகளை தொடர்ச்சியாக பேண வேண்டப்படுகிறீர்கள்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.