சாதிக் கான் லண்டனின் மேயராக மீண்டும் தேர்வு!!

 


லண்டன் மாநகரின் மேயராக இரண்டாவது தடவையாகவும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சாதிக் கான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


ஆளும் கொன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த ஷோன் பெய்லியை (44.8) தோற்கடித்த சாதிக் கான் அவருடன் ஒப்பிடுகையில் 55.2 சதவீத வாக்குகள் அதிகமாகப் பெற்றுள்ளார்.


2016 ஆம் ஆண்டு முதல் முறையாக லண்டன் மேயராக பொறுப்பேற்ற சாதிக் கான் மேற்குலக நாடொன்றின் மிக முக்கிய நகரின் மேயராக பொறுப்பேற்ற முதல் முஸ்லிம் ஆவார்.


கடந்த தேர்தலை விட இம்முறை வாக்களிப்பு வீதம் குறைவடைந்துள்ள போதும், தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த லண்டன் நகர மக்களுக்கு தனது நன்றிகளை சாதிக் கான் தெரிவித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.