யாழ். மக்களுக்கான விசேட அறிவிப்பு!!

 


யாழில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள் காணப்படுவதனால், பொதுமக்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கோரியுள்ளார்.


யாழ் மாவட்டத்தின் தற்போதைய கொரோனா நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் நேற்றைய தினம் 20 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் 1688 நபர்கள் யாழ் மாவட்டத்தில் தொற்றுக்குள்ளாகி யுள்ளார்கள் 21 மரணங்கள் பதிவாகியுள்ளன.


இதனை விட தற்போது இரண்டு கிராமங்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை யாழில் ஆயிரத்து 475 குடும்பங்களைச் சேர்ந்த 2261 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.