வாள்வெட்டு குழு வவுனியாவில் அட்டகாசம்!!

 


வவுனியா - ஆச்சிபுரம் கிராமத்தில் நேற்றய தினம் இரவு 11 மணியளவில் வாள்வெட்டு குழு வீடு புகுந்து நடத்திய தாக்குதலில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.


கத்திகளுடன் வீட்டுக்குள் புகுந்த குழுவினர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்ட கும்பல் தப்பிச் சென்றுள்ள நிலையில் தாக்குதல் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.