சொக்லேற் கனவுகள் 36 - கோபிகை!!

 


வெள்ளை மலர்களின் நடுவே

சிவந்த ரோஜாவைப்போல

தோழிகளின் நடுவே

அமர்ந்திருந்தாள் அனுதி. 


அலைபேசியில் 

மெல்லிய சிணுக்கம்

எடுத்துப் பார்த்தாள்,

ஆதி தான்.....


'ஏய்...ஏஞ்சல்.....'

மெல்ல இழுத்தவன்,

"எங்க இருக்கிறாய்?"

என்றான் சிரிப்போடு. 


'பிறன்ஸோட 

பூர்ணா வீட்டில்...

இரத்ததானம்முகாம் பற்றி

கதைக்கிறம்....


அடடா....முதலெல்லாம்

நான் சொன்னாலே

செய்யமாட்டாய்...

இப்ப என்ன தீடீரெண்டு....


'புருசனுக்கு ஏற்ற

மனைவியா 

இருக்க வேண்டாமாடா

அதுதான்....'


கலகலவெனச் 

சிரித்தவளின் கன்னத்தில்

ஓடி விழுந்தன

இரு குழிகள்....


'ம்ம்......'வார்த்தைகள்

ஒளிந்துகொள்ள 

மறுபுறத்தில் 

மௌனமாய் ஆதி......


'ஆதி......இனி எப்பவும்

நீ நினைப்பதை 

நான் செய்திடணும் 

போல இருக்குடா' என்றாள். 


'தவம் செய்திருக்கிறன்,

நீ எனக்கு வரமா கிடைக்க,'

கரகரப்போடு வந்தது

ஆதியின் வார்த்தைகள். 


மனக் கிண்ணத்தில்

பூக்களின் உலாவாய்

சுகித்தது அந்த வரிகள்

அனுதிக்கு.....


'அனு.....இப்பெல்லாம்

நிறைய கவிதை எழுதுறன்.....

தெரியுமா உனக்கு'

என்றவனிடம்,


'சொல்லு.....சொல்லு.....

எனக்காக ஒரு கவிதை' என்றபடி

தோழியரை விட்டு 

தள்ளி வந்தாள் அனுதி. 


அவன் கவிதையால்

தன் கன்னம் சிவப்பதை

எங்கே, தோழிகள் 

பார்த்தாலும் என்ற வெட்கத்தில்....


அவன் சொல்லியபடி

உருகிக்கொண்டிருக்க

இவள் கேட்டபடி

உருகிக்கொண்டிருந்தாள். 


'மனக்கூண்டில் நின்றபடி

சிறகடிக்கிறாய்

என் தேவதையே!!

நீயற்ற நினைவுகள்,

ஆர்ப்பாட்டம் செய்கிறது....!!

நயனத்தின் தழுவல்களில்

உன் விம்பம்....மட்டுமே...!!.

இதோ.....நான் உன் பாடலாய்...

நீ என் பல்லவியாய்.....!!

என் மனக்காட்டில் 

நீ மலராகிறாய்....!!

அன்றிலாய் பிறந்திடுவோம்

அது போதும்

ஜென்மங்கள் முக்திபெற.....!!


நிமிடங்கள் கடந்தும்

மௌனத்தின் ஆட்சி....

கலைக்க மனமின்றி

கவிழ்ந்து கிடந்தது

அவள் வதனம்.


கனவுகள் தொடரும்

கோபிகை.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.