கடந்த 24 மணித்தியாலங்களில் திருகோணமலையில் 6 பேர் உயிரிழப்பு!

 


திருகோணமலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸினால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.


அத்தோடு, மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.


கொரோனா தொற்றினால் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும் குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் உட்பட 6 பேர் கடந்த 24 மணித்தியாலயத்தில் உயிரிழந்ததையடுத்து இந்த 3ஆவது அலையில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.


அதேவேளை, குறிஞ்சாக்கேணி மற்றும் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா 8 பேர் வீதம் 16 பேரும் கிண்ணியா மற்றும் குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா 7 பேர் வீதம் 14 பேரும் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேரும் கந்தளாய், கோமரங்கடவை, தம்பலகாமம் ஆகிய மூன்று சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா இருவர் வீதம் 6 பேர் உட்பட 61 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.