கொரோனா தொற்று - தனியார் வைத்தியசாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு!!

 


நாட்டில் உள்ள தனியார் வைத்திய சாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோருடன் நேற்று முன்தினம் பிற்பகல் சுகாதார கலந்துரையாடல் நடைபெற்றது.


இந்த கலந்துரையாடலில் கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் தனியார் வைத்தியசாலைகளுக்கு அறிவுறுத்தியதாவது, சுகாதார அமைச்சு விடுத்த சுகாதார வழிகாட்டுதல்களின் படி பி.சி.ஆர் சோதனைகளை நடத்த அங்கீகாரம் பெற்றது.


சில வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களை முற்றிலுமாக மீறியுள்ளதாகவும், அமைச்சின் நடைமுறைகளைப் பின்பற்றாமல் அவற்றின் திறன்களை மீறியுள்ளதாகவும் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர்க்கு கிடைத்த புகார்களில் காணப்படுவதாகவும் அவர்களிடம் தெரிவித்தார்.


இந்த சந்திப்பின் போது பிரதிநிதிகளும் தங்கள் கருத்துகளையும் தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.