காத்திருப்பு - கவிதை!!

 


வலிகள் வல்லமை தந்தது.

தோல்விகள் தோழமை ஆனது,

அனுபவம் ஆசானானது

வரலாறு வழிகாட்டியது......


எங்கள் காடுகள் காத்திருக்கிறது

வீரக்காலடிகள் மீண்டும் படருமென்று....

எங்கள் கடலுக்கும் ஆசையிருக்கிறது

அலைகள் மீண்டும் சீறுமென்று....


ஆணைகள் கேட்டு 

அதிர்ந்தவள் கடலன்னை.....

பூனைகள் கத்தினால் 

பொங்காமல் போவாளோ?


தோற்றவர் வெல்வதும்

வென்றவர் தோற்பதும் 

கண்ணீர் காய்வதும் 

பிரபஞ்ச அகராதி


வரலாறு திரும்பும்...

வாழ்வியல் மாறும்

இன்னும் காத்திருக்கிறது

எங்கள் கடலும் 

எங்கள் காடுகளும்.....தமிழரசி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.