ப்ரியங்கா மருத்துவமனையில் அனுமதி!!!

 


விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


விஜய் டிவியில் உள்ள பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா என்பது தெரிந்ததே. காமெடி, கேலி, கிண்டல், பொழுதுபோக்கு மற்றும் சீரியஸ் என பல்வேறு விதங்களில் அவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார். அவருடைய சிரிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


கள்ளங்கபடம் இல்லாமல் புன்னகையுடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதே அவருடைய வெற்றிக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமின்றி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி உள்பட ஒருசில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே.


இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி விஜய் டிவி பிரியங்கா மருத்துவமனையில் ஏப்ரல் 12ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு இருந்ததாகவும் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. ஏப்ரல் 12ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த வீடியோவை அவர் தற்போது தான் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


விஜய் டிவி பிரியங்கா ஒரு சாப்பாட்டு பிரியர் என்பதை அவரே பல நிகழ்ச்சிகளில் கூறியுள்ளார் என்பதும் சக தொகுப்பாளினிகள் இதுகுறித்து அவரை அடிக்கடி கேலியும் கிண்டலும் செய்து வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.