பிரதி பொலிஸ்மா அதிபர் விடுத்த எச்சரிக்கை!!

 


இன்று நள்ளிரவு 12 மணி முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் வேறு மாகாணங்களுக்கு செல்ல முற்படும் நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதனை இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.


இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் வேறு மாகாணங்களுக்கு செல்ல முற்படும் நபர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகக் கருதி, தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.