வானதி சீனிவாசனிடம் அஜித் ரசிகர்கள் கோரிக்கை!

 


கோவை தெற்கு தொகுதியில் கமலஹாசனை தோற்கடித்த பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனிடம் அஜித் ரசிகர்கள் ’சொன்னதை செய்யுங்கள்’ என கேட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன் டுவிட்டரில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு அவர் டுவிட்டரில் பதிவு செய்த ஒரு டுவிட்டுக்கு அஜித் ரசிகர் ஒருவர் ‘வலிமை அப்டேட் எப்போது கிடைக்கும் என்று கேட்டு இருந்தார். அப்போது வானதி ஸ்ரீனிவாசன் அதற்கு பதிலளிக்கையில் ’நான் வெற்றி பெற்றவுடன் நிச்சயமாக வலிமை அப்படியே கிடைக்கும் தம்பி’ என பதிலளித்திருந்தார்.


இந்த நிலையில் தற்போது வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு வாழ்த்துக் கூறிய அஜீத் ரசிகர்கள் ’நீங்கள் வாக்குறுதி கொடுத்தபடியே ’வலிமை’ அப்டேட்டை கேட்டு சொல்லுங்க’ என்று கேட்டு வருகின்றனர். அஜித் ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ’வலிமை’ அப்டேட்டை வானதி சீனிவாசன் தருவாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


இந்த நிலையில் அஜித்தின் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.