பிரான்சு வித்றி -சூர்- சென் (vitry -sur-Seine) நகரசபையில் தமிழீழ மக்களுக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


பிரான்சு பாரிஸ் நகரை அண்மித்த நகரங்களில் ஒன்றான வித்றி -சூர்- சென் (vitry -sur-Seine ) நகரின் நகரசபையினால் 19.05.2021 புதன்கிழமை அன்று ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவான தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த தீமனத்தில் இலங்கையில் நடை பெற்றது இனப்படுகொலை என்றும் தமிழினப்படுகொலை செய்த இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அனைத்துலக சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு தனித் தமிழீழம் தான் நிரந்தர அரசியல் தீர்வாக இருக்க முடியும் எனவும், இவை போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய தீர்மானம் இவ்றி-சூர்-சென் நகரசபை முதல்வர், நகரசபை பிரதி முதல்வர், நகரசபை உறுப்பினர்கள் போன்றோரின் ஆதரவுடன் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படுள்ளது.


தமிழ் பண்பாட்டு வலையம் முன்வைத்த கோரிக்கைக்கு ஏற்றபவே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


வித்றி -சூர்- சென் (vitry -sur-Seine)நகரசபையுடன் தமிழ் பண்பாட்டு வலையம் ஒரு வருடங்களுக்கு மேலாக இணைத்து பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் பண்பாட்டு வலையயதுடன் இணைந்து வித்றி -சூர்- சென் (vitry -sur-Seine)நகரசபை ஊடக தமிழ் மக்களின் நீதிக்காக பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் நகரசபையின் முதல்வர் திரு.Pierre Bell-Lloch அவர்களுக்கும் நகரசபையின் துணை முதல்வரும் சர்வதேச தொடர்புக்கு பொறுப்பானவருமான திரு.Albertino Ramaël அவர்களுக்கும் தமிழ் பண்பாட்டு வலையதின் சார்பாகவும் தமிழீழ மக்களின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறோம்


"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
.தமிழ் பண்பாட்டு வலையம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.