இதய வயலில்
நினைவுக் கதிராய்
ஞாபக அலைகள்....
அரிவாமுனை பட்ட
உப்படியைப் போல
மனச்சருகு....
பொலிக்குவியலாய்
பளபளக்கிறது
ஆசைகள்...
நான்
சூடா மாலைகள்
நாராகி கிடக்கிறது....
விழி தேடி
தவிக்கிறது
தாய் நேசங்களுக்காய்...
கவி தாண்டிப்
பிறக்கிறது - ஒரு
கலை ஓவியம்......
கோபிகை
கருத்துகள் இல்லை