முறையாக மூன்று விண்வெளி!!வீரர்களை விண்வெளி நிலையத்துக்கு சீனா அனுப்பவுள்ளது.!

 

சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி பணியின் திட்டத்தில் முதல் முறையாக மூன்று விண்வெளி வீரர்களை விண்வெளி நிலையத்துக்கு சீனா அனுப்பவுள்ளது.

நாளை வியாழக்கிழமை 9:22am (01:22 GMT) மணிக்கு Shenzhou-12 விண்வெளி ஓடத்தில் செல்லவுள்ளனர். இலங்கை நேரப்படி வியாழக்கிழமை காலை 6:52 மணிக்கு என இலங்கைக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஒரு விண்வெளி நிலையத்தை செயற்படுத்தி முடிக்கும் லட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாக விண்வெளிக்கு செல்கின்றனர்..
வடமேற்கு கன்சு மாகாணத்தின் (Gansu province) ஜியுகானில் இருந்து Shenzhou-12 என்ற விண்வெளி ஓடத்தில் செல்லவுள்ளனர்.
இதில் Nie Haisheng, (வயது-56), Liu Boming, (வயது- 54), மற்றும் Tang Hongbo (வயது-45), ஆகியோர் விண்வெளிக்கு செல்லவுள்ளதாக சீனாவின் விண்வெளி ஏஜென்சியின் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.