ஏலக்காய் துளசி பானம்!

 


ஒரே டென்ஷனா இருக்கு.’ - பள்ளிக் குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் அன்றாடம் அலுத்துக்கொண்டே உச்சரிக்கும் வார்த்தைகள் இவை. அப்படிப்பட்ட நேரத்தில் எளிமையாகச் செய்யக்கூடிய இந்த பானத்தை அருந்துங்கள். உடனடி உற்சாகம் பெறுவீர்கள்.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீரை ஊற்றிக் கொதிக்க வைக்கவும். அதனுடன் பொடித்த ஐந்து ஏலக்காய், கால் டீஸ்பூன் ஜாதிக்காய்த்தூள், ஒரு கைப்பிடி அளவு துளசி, 20 கிராம் பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். வாசனை வரும்போது இறக்கி வடிகட்டி இளஞ்சூடாகப் பருகவும்.

சிறப்பு

துளசி மனதை அமைதியாக்கும்; மன இறுக்கத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.