பிரித்தானியாவின் அல்பா வைரஸ் இலங்கையில் கண்டறிவு!!


 பிரித்தானியாவின் B117 அல்பா வைரஸ் இலங்கையின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி மட்டக்களப்பு, திருகோணமலை, குளியாபிடிய, வாரியபொல, ஹபராதுவ, திஸ்ஸமாராம, இராகம பகுதிகளில் குறித்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியர் சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸூம் இலங்கையில் வாத்துவ பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து வருகை தந்த ஒருவருக்கே இந்த வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.