அயல் வீட்டுக்காரருக்கு மனைவி sms அனுப்பியதில் இருவர் வைத்தியசாலையில்!!
அயலில் உள்ள நபருக்கு “கோஹோமட சூது”( How are you darling ) என்று sms அனுப்பிய மனைவியால் வந்த தகராறில் கணவன் மற்றும் அயலவர் பலத்த கத்தி குத்து காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளதுடன் இரு குடும்பத்தை சேர்ந்த மேலும் 6 பேர் காயம் அடைந்துள்ளார்கள்.தனது 35 வயது மனைவி அயலவருக்கு அனுப்பிய sms ஐ பார்த்த கணவன் அது தொடர்பாக மனைவியிடம் வினவியபொழுது , தான் தவறுதலாக அனுப்பியதாக மனைவி பதிலளித்த நிலையில் , அயலவரான 25 வயது நபரிடம் குறித்த கணவன் sms குறித்து வினவியுள்ளார் .
இறுதியில் வாக்குவாதத்தில் தொடங்கி கதிக்குத்தில் முடிந்ததில் இரு குடும்பத்தை சேர்ந்த 8 பேர் காயமடைந்துள்ளதுடன் , கணவன் மற்றும் அயலவர் பலத்த கத்தி குத்து காயத்துடன் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
தற்பொழுது அமுல்படுத்தப்படுள்ள பயணத்தடையின் பின்னர் குடும்ப தகராறுகள் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை