கொரோனா உயிரிழப்பு இலங்கையில் அதிகரிப்பு!!

 


இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2000 ஐ கடந்துள்ள நிலையில் , ஒரே நாளில் நூற்றுக்கும் அதிகமான கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நாளொன்றில் நூறுக்கும் அதிக கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

101 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2011 ஆக உயர்வடைந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 53 ஆண்களும் 48 பெண்களும் உள்ளடங்குவதோடு , 30 பேர் வீடுகளிலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் கடந்த பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி மற்றும் ஏப்ரல் முதலாம் திகதி இடம்பெற்ற மரணங்கள் கொரோனா தொற்றினால் ஏற்பட்டவை என்று நேற்றைய தினமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. ஏனைய மரணங்கள் மே மாதம் 15 ஆம் திகதி முதல் ஜூன் 9 ஆம் திகதி வரை பதிவானவையாகும்.

வாழைச்சேனை, வேபொட, பசறை, வெலம்பொட, புபுரெஸ்ஸ, நாவலபிட்டி, தொலொஸ்பாகே, நுவரெலியா, ஹட்டன், றாகமை, பொலன்னறுவை, பண்டாரகம, நேகொட, மில்லனிய, உணவிட்டுன, அமுகொட, ஹிரிம்புர, வக்வெல்ல, திக்வெல்ல, காலி, தியதலாவை, வத்தளை, ஜாஎல, மினூங்கொடை, சந்தலங்காவ, தெவுந்தர, கம்பஹா, கல்கிஸை, ஹோமாகம, பிலியந்தல, தெஹிவளை, மஹரகம, கொழும்பு-15, கெஸ்பேவ, கந்தபொல, நுவரெலியா, டிக்கோயா, பொகவந்தலாவை, மஸ்கெலியா, கொட்டகல, நாத்தாண்டியா, அக்கரைப்பற்று,

மொரட்டுவை, மடவல, ஹப்புகஸ்தென்ன, நாகொட, மத்துகம, பேருவளை, கிதலவ, மக்கொன, உக்குவெல, மாத்தளை, கட்டுகித்துல, கரந்தெனிய, கட்டுகஸ்தோட்டை, மட்டக்களப்பு, உடபுஸலாவை, ரத்தொழுகம, சீதுவை, அரநாயக்க, புளத்சிங்கள, கோவின்ன, ஹொரணை, வலல்லாவிட்ட, போம்புவ, கண்டி, வேயங்கொடை, வெலிகம, ரத்கம, மாரவில, படல்கம, அம்கஸ்துவ, ஏகொடஉயண, அங்குலானை, தும்மலசூரிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.   

இந்நிலையில் இன்று 2,759 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இதுவரையில் நாட்டில் 218 893 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 184 090 பேர் குணமடைந்துள்ளதோடு , 32 818 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.