ஒரு நாளில் கொரோனா தொற்றினால் இந்தியாவில் 4 ஆயிரத்து 2 பேர் உயிரிழப்பு!!

 


இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் 4 ஆயிரத்து 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 84 ஆயிரத்து 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,  ஒரு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை, 70 நாட்களில் இல்லாத அளவுக்கு 85 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகியுள்ளது.

மேலும் புதிதாக  84 ஆயிரத்து 332 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் புதிதாக 4 ஆயிரத்து 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் 1 இலட்சத்து 21 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 11 இலட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.