பெரியகல்லாறில் 10 பேருக்கு கொரோனா தொற்று!!

 


மட்டக்களப்பு- பெரியகல்லாறில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அண்மையில் பெரியகல்லாறு- உதயபுரம் பகுதியில், மரண வீடு ஒன்றில் கலந்துகொண்ட 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக பெரியகல்லாறு 2ஆம், 3ஆம் கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று, பெரியகல்லாறு 3ஆம் கிராம சேவையாளர் பிரிவுகளில் 80 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில்,10 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பகுதியிலுள்ள ஏனையவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.