கொரோனா பாதிப்பு யாழில் 5000ஐ நெருங்கியது!!
![]() |
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தை நெருங்கியுள்ளது.
யாழில் இன்று (புதன்கிழமை) 33 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு நான்காயிரத்து 945 ஆக அதிகரித்துள்ளதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் மணித்துள்ள நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 73ஆக அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 70 வயதுடைய பெண்ணொருவரே இன்று உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட குருநகரில் ஜே-69 கிராம சேவகர் பிரிவான ரெக்குலமேசன் மேற்கு மற்றும் ஜே-71 கிராம சேவகர் பிரிவான குருநகர் மேற்கு பகுதிகளைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரினால் கொவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் செயலணிக்கு பரிதுரைக்கப்பட்டதன் அடிப்படையிலேயே குறித்த பகுதிகளைத் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #W orld News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை