மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!
நாட்டின் மேலும் சில பகுதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, 3 மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
கொழும்பு, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #W orld News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை