கொழும்பில் மற்றுமொரு டெல்டா தொற்றாளர் அடையாளம்!!

 


கொழும்பின் புறநகரான கஹதுடுவ − ஜயலியகம பகுதியில் கொவிட் டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

47 வயதான குறித்த நபர், கொழும்பு − கொம்பனிதெரு பகுதியிலுள்ள பிரதான நிர்மானத்துறை அலுவலகமொன்றில் பணியாற்றியவர் எனவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபர், பொலன்னறுவை கொவிட் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் குறித்த நபரின் மனைவி, மகன் உள்ளிட்ட 50 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் தொற்றுக்குள்ளன நபர் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து, இந்த வைரஸ் பரவியிருக்கக்கூடும் என சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.