உலக மருத்துவர்கள் தினம்!!

  


இன்று உலக மருத்துவர்கள் தினம்,  அல்லும் பகலுமாய் ஓயாது பணியாற்றி உலகத்தில் உயிர் காக்கும் இவர்களின் பணியென்பது ஒரு நாளின் போற்றுதலுக்கு உரியது அல்ல.  நாள் தோறும் நினைத்து நிமிடம் தோறும் போற்ற வேண்டிய ஒன்றாகும். 

கடமைகள் மட்டும் இவர்களை இயக்குவதில்லை,  கடவுளின் பாதையில் இயங்கும்  , மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கருத்தை சிரம் மேற் கொண்டு கடமை செய்யும் இரண்டாம் கடவுளர்கள் இவர்கள். 

வேற்றுமை பாராது தமது சேவையை  அனைவருக்கும் ஒரே அளவில் கொடுத்து உயிர் காக்கும் புனிதர்கள், கனிவும் கருணையும் நிரம்பப் பெற்றவர்களே இச்சேவையை மனதார கொடுப்பவர்கள், 

உலகம் சுழல்கிறது, சூரிய சந்திரர் வந்து போகின்றனர், பூமியின் இயக்கத்தில் எல்லாமே ஒழுங்குடன்  நடக்கிறது,  ஆனால் ஒரு வைத்தியரின் பணி என்பது அப்படிப்பட்டது அல்ல,  எந்நேரமும் தன் கடமைக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள் இவர்கள். 

டொக்ரர் பிதான் சந்திரா ராய் அவர்கள் பிறந்த தினம் யூலை -1,  இவர் இறந்ததும் இதே நாள் தான்.  அந்நாளே மருத்துவர்கள் தினமாக நினைவு கூரப்படுகிறது.  மருத்துவர்களின் தினம் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்பட்டாலும்  இந்தியாவில் 1991-ம் ஆண்டிலிருந்து ஜூலை முதல் நாளை தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடி வருகிறார்கள். 

இப்புனிதமான நன்நாளில் மருத்துவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் கூறுவதோடு தன்னலமில்லாது சேவையாற்றும் மருத்துவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்.  


கோபிகை


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.