தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு புதிய உபவேந்தர் நியமனம்!!

 


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக புதிய உபவேந்தராக கலை, கலாச்சார பீடத்தின் தற்போதைய பீடாதிபதி பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக இளம் வயதில் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் இவர் அதே பல்கலைக்கழகத்தின் மாணவராவார்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவுக்குழுவின் பேரவைக்குழுவிற்கு தெரிவுக்குழுவினால் சமர்ப்பித்த பட்டியலில் முதலாம் இடத்தை இவர் தக்கவைத்திருந்தார்.

இந்நிலையில் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் எதிர்வரும் ஓகஸ்ட் 09 ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.