இலங்கையில் சமையல் எரிவாயு தொடர்பில் விசேட வர்த்தமானி!!
நாடு முழுவதும் 12 தசம் 5 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விற்பனை செய்யப்படுவதனை உறுதிப்படுத்தும் வகையிலான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 12 தசம் 5 கிலோகிராம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விற்பனை செய்யப்படுவதனை நிராகரிக்க முடியாது என உற்பத்தியாளர்களுக்கு அறிவிக்கும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை