திடீரென ஹரின் பெர்ணான்டோவின் இல்லம் பொலிசாரால் சுற்றிவளைப்பு!

 


ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவின் இல்லத்திற்கு திடீரென சென்ற சிறப்பு பொலிஸ் குழுவொன்று அவரது இல்லைத்தை சுற்றிவளைத்ததால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை கொழும்பு – வத்தளை பிரதேசத்திலுள்ள அவரது வீட்டிற்கே  பொலிஸ் குழுவினர்  விஜயம் செய்திருப்பதாக கூறப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவின் இல்லத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில் கூட்டமொன்று நடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்தே பொலிஸார் இவ்வாறு விரைந்திருக்கின்றனர்.

இருந்த போதிலும் அங்கு அப்படியான கூட்டம் நடைபெறாததை தொடர்ந்து பொலிஸார் அங்கிருந்து திரும்பியதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.