12 ஆண்டுகளின் பின்னர் யாழில் குடும்பத்துடன் இணைந்த அரசியல் கைதி!!


 யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பொசன் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபயவின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைதிகளில் 16 தமிழ் அரசியல் கைதிகளும் மற்றும், 77 சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையிலேயே யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரனும் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் பயங்கரவாத தடுப்பு தடைச்சட்டத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.