ஜோ பைடன் அரசில் ஈழத்தமிழருக்கு உயரிய பதவி!!

 


இலங்கையை பூர்வீகமாக கொண்ட கலாநிதி ஜோர்ஜ் கேப்ரியல் வெள்ளை மாளிகை பட்டய சான்றிதழ் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களுள் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இதனை உறுதி செய்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த நியமனத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலாநிதி ஜோர்ஜ் கேப்ரியல் இலங்கையின் - மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தை பிறப்பிடமாகவும் பூர்வீகமாகவும் கொண்டவர் என்பதுடன், களனி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகை பட்டய சான்றிதழ் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு 22 உறுப்பினர்களை நியமித்துள்ளார்.

இந்த ஆணைக்குழு அமெரிக்காவின் பன்முகத்தன்மையையும், வலிமையையும் பிரதிபலிக்கும் சிறந்த குடிமக்களால் ஆனது, அதே நேரத்தில் பரந்த அளவிலான பின்னணிகள், அனுபவங்கள் மற்றும் தொழில்களைக் குறிக்கிறது.

அந்த வகையில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட கலாநிதி ஜோர்ஜ் கேப்ரியல் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.