ஜுலையில் அமைச்சரவையில் ஏற்படவுள்ள மாற்றம்!!


 ஜுலை மாதம் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளதாக நம்பகரமான அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி முக்கிய சில அமைச்சுகள் கைமாறவுள்ளதுடன், விடயதானங்களும் கைமாற்றப்படவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

குறித்த அமைச்சரவை மறுசீரமைப்பின்போதே நீதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சு பதவி பஸில் ராஜபக்சவுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சு பதவிகள் மாற்றப்படலாம் அல்லது அவர்கள் வகிக்கும் அமைச்சுகளில்கீழுள்ள சில அரச நிறுவனங்கள் ஏனையோருக்கு வழங்கப்படலாம் எனவும் அரசியல் வட்டார தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, அரச நிறுவனங்களின் பிரதானிகள் பதவியிலும் மாற்றம் வரக்கூடும் எனவும் மேலும் தெரியவருகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.