பணிப்பெண்ணாகச் சென்றவர் குவைத்தில் மாரடைப்பால் மரணம்!!

 


மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை ஓடாவியார் வீதியில் வசித்து வந்த பெண்ணொருவர் நேற்று (6) குவைத் நாட்டில் மரணமடைந்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தாயான 47 வயதுடைய அபூபக்கர் சித்தி பரீனா எனும் பெண்மணியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

குறித்த பெண் சுமார் ஒன்றரை வருடத்துக்கு முன்னர் குவைத் நாட்டிற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார். இவ்வாறு அங்கு தொழில் புரிந்து வந்த நிலையில் நேற்றிரவு தூங்கிய நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக தமக்கு குவைத் நாட்டிலிருந்து தகவல் கிடைத்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மரணமடைந்த பெண்ணின் உடலை குவைத்தில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக குடும்பத்தினர் மேலும் தெரிவித்தனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.