தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள்!!


 கம்பஹா, நுவரெலியா, காலி, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 11 பகுதிகள் இன்று காலை தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் நுவரேலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட களுதமத, ஹப்புகஸ்தலாவ, வீரபுர மற்றும் பஹல கொரகஒய ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கம்பஹா மாவட்டத்தின் பியகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யட்டிஹென கிராம சேவகர் பிரிவின் பொல்ஹேன வீதி, லேக்சிவ் வீதி மற்றும் வர்த்தக வலய வீதியின் ஒரு பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மீகஹவத்த பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சியபலாபெவத்த கிராம சேவகர் பிரிவின் குறிப்பிட்ட சில பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் இந்துருவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோனகல கிராம சேவகர் பிரிவின் பொல்துடுவ கிராமம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதிய வலதபிட்டி கிராமம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீராவோடை கிழக்கு, மீராவோடை மேற்கு மற்றும் மாஞ்சோலை பதுரிய ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.