மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!!
![]() |
நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று (புதன்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில் 4 மாவட்டங்களைச் சேர்ந்த 6 பகுதிகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மொனராகலை மாவட்டத்தின் பிபில பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கனுல்வெல பகுதி இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கேகாலை மாவட்டத்தின் வரகாபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்லவ கிராமசேவகர் பிரிவின் நியதுருபொல இலக்கம் 1, 2, 3 மற்றும் 4 ஆகிய தோட்ட வீடுகள் பகுதி ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கன்னகம கிராமசேவகர் பிரிவின் தேவாலகந்த தோட்டப் பகுதி மற்றும் கொடம்பல கிராம சேவகர் பிரிவின் பபேகம தோட்டப் பகுதி ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எலதூவ கிராம சேவகர் பிரிவின் எலதூவ தோட்டப் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பழைய கொலனி கிராம சேவகர் பிரிவின் திவிதுரு தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது..
இதேவேளை 4 மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, களுத்துறை, கம்பஹா, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 5 கிராம சேவகர் பிரிவுகளே இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை