பஞ்ச தகவல்கள் அறிவோம்!!

 


1. பஞ்ச கன்னியர் - அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி.


2. பஞ்சவாசம் - இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.

3. பஞ்சாமிர்தம் - சர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.

4. பஞ்சபாண்டவர் - தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன்.

5. பஞ்சசீலம் - கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை.

6. பஞ்சதிராவிடர் - தெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர், கூர்ஜரர்.

7. பஞ்சபட்சி - வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.

8. பஞ்சபுராணம் - தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.

9. பஞ்சரத்தினம் - வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.

10. பஞ்சவர்ணம் - வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.

11. பஞ்சாங்கம் - கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம்.

12. பஞ்சமூலம் - செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு.

13. பஞ்சபாதகம் - பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை.

14. பஞ்சபாணம் - முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம்.

15. பஞ்சாயுதம் - சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில்.

16. பஞ்சபரமோட்டி - அருகர், சித்தர், உபாத்தியாயர், ஆசிரியர், சாதுக்கள்.

17. பஞ்சசிகை - தலை, உச்சி, கண், புருவம், முழங்கை.

18. பஞ்சதேவர் - பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன்.

19. பஞ்சஸ்தலம் - காசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்.

20. பஞ்ச பூதங்கள் - நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்.


21. பஞ்ச சபைகள் - கனக சபை, இரத்தின சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை.

22. பஞ்ச மூர்த்திகள் - சிவபெருமான், அம்பிகை, விநாயகர், முருகன், சண்டிகேசுவரர்.

23. பஞ்சபிராணன் - பிராண வாயு, உதான வாயு, விதான வாயு, சமான வாயு, அபான வாயு.

24. பஞ்சபத்திரங்கள் - துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி.

25. பஞ்சமகாயக்ஞங்கள் - தேவ யக்ஞம், ரிஷி யக்ஞம், பித்ரு யக்ஞம், பூத யக்ஞம், மனித யக்ஞம்.

26. பஞ்ச யோகங்கள் - ஹம்ச யோகம், மாளவ்ய யோகம், பத்ர யோகம், ருசக யோகம், சச யோகம்.

27. பஞ்ச கோஷங்கள் - அன்னமயக் கோஷம், பிராணமயக் கோஷம், பிராணமயக் கோஷம், மனோமயக் கோஷம், விஞ்ஞானமயக் கோஷம், ஆனந்தமயக் கோஷம்.

28. பஞ்சகவ்யம் - பசும்பால், பசு தயிர், பசு நெய், பசு மூத்திரம், பசு சாணம்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.