இலங்கை இராணுவத் தளபதிக்கும் ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவருக்கும் இடையே சந்திப்பு!

 


இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் ​மேதகு யூரி பி. மேட்டரி, அவர்கள் கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை கடந்த திங்கட்கிழமை ஸ்ரீ ஜெயவர்தனபுரயில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் கொவிட் -19 தொற்று நோயினை ஒழிப்பதுக்கு படையினரின் ஈடுபாட்டின் முக்கியத்துவத்திற்கும் தூதுவர் பாராட்டியதோடு நாட்டில் நோய் தொற்று பரவுவதற்கு எதிராக அனைத்து பங்குதாரர்களின் பங்களிப்பையும் பாராட்டினார். உலகின் தற்போதைய நோய் தொற்றை ஒழிப்பதற்கான முன்னேற்றங்களையும் அவர் அவதானித்தார்.

மேலும் அதன் பரவலின் அளவு, தொற்று வீதம் மற்றும் ஏனைய முக்கிய விடயங்கள் தொடர்பாக விவாதித்தனர். அதற்கமைய ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களால் கொவிட் -19 தொற்றின் நிலைமை, தடுப்பூசி, தனிமைப்படுத்தல் மையங்களின் நிலமைகள், பயணக் கட்டுப்பாடுகள், கொவிட் நோய் தொற்றை கண்டறிதல் தொடர்பான விவரங்களையும் ஜனாதிபதி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சவாலை நோக்கி செல்லும் மூலோபாய மற்றும் குறிப்பிட்ட அணுகுமுறையை விளக்கினார். மேலும், இடை நிலை பராமரிப்பு மையங்கள் மற்றும் தனிமைப்படுத்தல் மையங்களின் நடவடிக்கைகள் மற்றும் நாடு முழுவதும் மேற் கொள்ளப்பட்டுவரும் தடுப்பூசி திட்டங்கள் தொடர்பாகவும் அவர் விளக்கமளித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.