மற்றுமொரு விசேட வர்த்தமானி வெளியீடு!!

 


பொது மக்களின் தேவைகருதி அத்தியாவசிய சேவைகள் தொடர்பான மற்றுமொரு விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் கீழ் துறைமுக அதிகார சபைக்கு உட்பட்ட சேவைகள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் வளங்கள் மற்றும் பகிர்ந்தளித்தல், பொருட்களை கொண்டு செல்வதற்கு ரயில்வே திணைக்களம் மற்றும் வீதி போக்குவரத்து சபையின் மூலம் மேற்கொள்ளப்படும் பொது போக்குவரத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சகல மாவட்ட ,பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தவர்கள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , கமத்தொழில் ஆராய்ச்சி உதவியாளர்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்படும் சேவை நடவடிக்கைகள், பொது சேவைகளை மேற்கொள்ளும் வண்ணம் தேவைப்படும் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு , இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அரச வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவை நடவடிக்கைகள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளபடும் கழிவு பொருட்கள் முகாமைத்துவ சேவ நடவடிக்கைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் வரையறுக்கப்பட்ட இலங்கை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம், கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம், உணவு ஆணையாளர் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் சகல உணவு குடிபானப் பொருட்கள் உள்ளிட்ட பொது மக்களுக்கு தேவையான ஏனைய சகல நுகர்வுப் பொருட்களை வழங்குதல், களஞ்சியப்படுத்துதல், விநியோகித்தல் மற்றும் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மாகாணசபைக்கு உட்பட்ட மற்றும் சுகாதார துறைக்குட்பட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.