மதுபான விற்பனை தொடர்பில் பிரதமருக்கு வந்த கடிதம்!!

 


நாட்டின் புகைத்தல் பொருள் மற்றும் கலால் சட்டத்தின் கீழ் இணைய வழியூடாக மதுபானங்களை விளம்பரப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் தற்போது இணைய வழியூடாக மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கியுள்ளமையானது நாட்டின் சட்டத்துக்கு அப்பாற்பட்டதாகவே காணப்படும் என இலங்கை மருத்துவ சங்கம் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

மதுபான பாவனையானது பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் அதன் மூலமான பாதிப்புக்களுக்கும் தற்கொலைகளுக்கும் அடிப்படை காரணியாக அமைகிறது. எனவே இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமையானது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு அதனால் அரசாங்கத்துக்கு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த கடிதம் , இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன மற்றும் அந்த சங்கத்தின் புகைபொருள் , மதுபானம் மற்றும் போதைப்பொருள் நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் நாரதா வர்ணசூரிய ஆகியோரின் கையெழுத்துக்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இணைய வழியூடாக மதுபான விற்பனைக்கு நிதி அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ள விடயம் தொடர்பில் இலங்கை மருத்துவ சங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அதற்கமைய பல்பொருள் அங்காடிகளின் விநியோக சேவைகள் மூலம் மதுபான விற்பனையை செயற்படுத்தும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளமையை இலங்கை மருத்துவ சங்கம் எதிர்க்கின்றது.

பொது மக்களின் உடல் நலம் மற்றும் பொருளாதார தாக்கங்கள் உள்ளிட்டவை தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள இலங்கை மருத்துவ சங்கம் , மதுபானங்களை இணையவழியூடாக விற்பனை செய்ய அனுமதிப்பதன் அபாயங்கள் குறித்து எச்சரிக்கிறது. இந்த மிகக் கடினமான காலகட்டத்தில் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் மது விற்பனைக்கான அனுமதியை இரத்து செய்வதற்கு நீங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்களை தெரிவிக்க விரும்புகிறோம்.

இந்த தீர்மானமானது உடல்நலம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருந்த குடும்பங்களுக்கு கடந்த சில வாரங்களில் இது ஒரு பெரிய நிவாரணமாக அமைந்திருந்தது. தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மருத்துவ நலனைக் கருத்திற் கொண்டு தற்போது இணைய வழியூடாக மதுபானத்தை விற்பளை செயவதற்கும் அனுமதி வழங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் மதுபான பாவனையானது பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் , அதன் மூலமான பாதிப்புக்களுக்கும் , தற்கொலைகளுக்கும் அடிப்படை காரணியாக அமைகிறது.

எனவே இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமையானது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு அதனால் அரசாங்கத்துக்கும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #W orld News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.