ஆசிரியர்கள் அதிபரால் பாடசாலைக்கு அழைப்பு!!

 


பயணத் தடை நேரமும் சம்பளப் பட்டியலில் கையொப்பம் இடுவதற்கு பாடசாலைகளுக்கு வருகை தருமாறு அதிபர்கள் அழைப்பதாக ஆசிரியர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இச் செயற்பாடு வடமராட்சி கல்வி வலயத்தில் இயங்கும் பிரபல்ஜம் வாய்ந்த அதிபரின் செயற்பாடாக அமைந்துள்ளது.

அத்துடன் இன்றைய தினம் வருகை தரும் போது மாணவர்களுக்கு இந்த வாரம் ஒவ்வொரு ஆசிரியர்களாலும் மேற்கொள்ளப்பட்ட Zoom செயற்பாடு,  viber செயற்பாடு போன்றவற்றின் அறிக்கையையும் கொண்டு வருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாராந்த அறிக்கை தொடர்பாக கல்வி வலயத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தே ஆசிரியர்களை அதிபர்கள் அழைப்பதாக தெரியவந்துள்ளது.

பயணத் தடை காலத்தில் அனுமதிக் கடிதங்கள் இன்றி வெளியில் நடமாடுபவர்களை இராணுவத்தினர் மற்றும் பொலீஸாரால் கைது செய்யப்பட்டு உடனடியாக தனிமைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டு PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்ட போதிலும் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு செல்வது எவ்வாறு சாத்தியமாகும் எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் கவனமெடுக்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.