விபத்து கப்பலால் இலங்கை கடல்வளத்திற்கு வரலாற்று அழிவு - ரஞ்சித் ஆண்டகை!!


 ஸ்ரீலங்காக் கடல்வளத்திற்கு வரலாற்று அழிவை ஏற்படுத்திய சிங்கப்பூர் கப்பல் நிறுவனத்திற்கு எதிராக மீனவர் சங்கங்களின் ஊடாக வழக்கு தாக்கல் செய்யப் போவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.


நாட்டைப் பாதுகாப்பதாக ஆட்சிக்கு வந்தவர்களினால் இன்று ஸ்ரீலங்கா பாரிய அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை கொழும்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.


இதில் உரையாற்றிய அவர்,


தற்போதைய ஸ்ரீலங்கா அரசாங்கம் மீது வைத்திருந்த நம்பிக்கை தவிடுபொடியாகிவிட்டதாக கவலை வெளியிட்டதோடு, தென்னிலங்கை கடல்வளத்தை அழித்திருக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மெத்தனப் போக்கையும் கடுமையான விமர்சித்தார்.


கொழும்பு பேராயர் – உண்மையில் நாங்கள் தற்போது உள்ள நிலைமையை கண்டு கவலையடைகிறோம். ஸ்ரீலங்காவில் இன்று ஆட்சிமுறை இருக்கின்றதா? நாடு எங்கே செல்கின்றது என்ற அச்சம் உருவாகிவிட்டது.


வரலாறு மற்றும் இயற்கை வளங்கொண்ட நாடாகிய ஸ்ரீலங்காவினை பாதுகாக்கப் போவதாக தெரிவித்து ஆட்சிக்குவந்தவர்கள் தற்போது நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்கின்றனர்.


நாங்கள் எதிர்பார்த்த அனைத்து எதிர்பார்ப்புக்களும் இன்று நொருங்கிவிட்டன. அரசாங்கம் தனது பயணத்தை உடன்நிறத்த வேண்டும். அபிவிருத்தி என்பது நாட்டிலுள்ள சொத்துக்களை விற்பனை செய்வதல்ல. பல்வேறு நாடுகளுக்கும் எமது நாட்டு காணிகளை விற்பனை செய்ய வேண்டாம்.


ஆரம்பத்தில் எம்.சி.சி ஒப்பதத்திற்கு எதிராக நாங்கள் குரல் எழுப்பியபோது எம்முடன் இணைந்துகுரல் எழுப்பியவர்கள் இன்று ஆட்சிக்கு வந்தவுடன் அந்த ஒப்பந்தத்தை விடவும் அப்பாற்சென்று விபரீதத்திற்குள் நாட்டை வழிநடத்துகின்றனர்.


எக்ஸ்பிரஸ் கப்பல் ஸ்ரீலங்காவுக்கு நெருங்கியபோது கப்பலில் சிறிய தீ விபத்து ஏற்பட்டதை ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டோம். அப்போதே அந்தக் கப்பலை சர்வதேச கடற்பகுதிக்குஅனுப்பாமல் அரசாங்கம் காலதாமதம் செய்ததினால் இன்று முழு கடல்வளமும் அழிவுக்குள் தள்ளப்பட்டுவிட்டது.


ஆகவே சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திற்கெதிராக மீனவ அமைப்புக்களை வழக்கு தாக்கல் செய்யும்படி நான் கோரியுள்ளேன். அதற்கு நான் தலைமைவகிப்பேன். உரிய நட்டஈடு கொடுக்கும்வரை நாங்கள் போராடுவோம்.


இதேவேளை இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை, ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் பற்றி கருத்து தெரிவிக்கவும் மறக்கவில்லை.


ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கையில், முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உட்பட பலர்மீது நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரைத்திருக்கின்ற போதிலும் அவர்களை தற்போதைய அரசாங்கம் பாதுகாக்கின்றது என்றும் குற்றஞ்சாட்டினார்.


கொழும்பு பேராயர் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின் பாரிய சூழ்ச்சி இருப்பதாக ஓய்வுபெற்ற சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா கூறியிருந்தார்.


இதுகுறித்து தற்போதைய சட்டமா அதிபர் விசாரணை செய்ய வேண்டும். சில நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத சூழலை தற்போதைய அரசாங்கம் மேற்கொள்கிறது.


ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பின் துணைக் குழு ஒன்றை அமைத்த அரசாங்கம், அதன் பரிந்துரைகளால் அரச பக்கத்திற்கு ஒருசட்டமும், மற்றவர்களுக்கு இன்னுமொரு சட்டமும் அமுல்படுத்தியது. சிலரை அரசு பாதுகாக்கிறது.


முன்னாள் அரச தலைவர், முன்னாள் புலனாய்வு அதிகாரிகளை தண்டிக்க வேண்டுமென அறிக்கை பரிந்துரைத்த போதிலும் அதனை இதுவரை ராஜபக்ச அரசாங்கம் செய்யவில்லை. 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்ள முஸ்லிம் உறுப்பினர்களுடன் அரசாங்கம் டீல் செய்தது. இ


ந்த முறைகேட்டு பயணம் நாட்டையே அழிக்கப்போகிறது. ஏன் நாங்கள் வாக்களிக்க வேண்டும்? 225 உறுப்பினர்கள் எதற்கு? வாக்கு முறை எதற்கு என்ற சந்தேகமும் எழுந்துவிட்டது. பொய்கூறி ஆட்சியை கொண்டுசெல்லவோ, சர்வாதியார பயணத்தில் செல்லவோ நாங்கள் இடமளிக்கமாட்டோம்.


மக்கள் பக்கமாக நின்று தீர்மானம் எடுக்கக்கூடிய அரசாங்கமே தலைவர்களே எமக்கு அவசியம். பிச்சை எடுக்கக்கூடிய நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டுவிட்டது. ஆட்சியாளர்களின் பலவீன செயற்பாட்டினால் இயற்கை இன்று பதிலடி கொடுக்கின்றதோ என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கின்றது என தெரிவித்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.