பயணத்தடை காலத்தில் யாழில் துப்பரவு பணி!!
கொரோனா பேரிடர் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக மாநகர இயல்பு நிலையை இழந்திருக்கும் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக் கொண்டு யாழ்.நகரப் பகுதி வடிகால்கள் மிகவேகமாக தூய்மைப்படுத்தப்படுகின்றன.
அந்தவகையில் யாழ்ப்பாணம் ஸ்ராலி வீதியில் காணப்படுகின்ற வடிகால்கள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்ற அதே வேளை பல வருடங்களாக தூர்வாரப்படாத ஸ்ரான்லி வீதிக்கு கீழுள்ள நகரக்குளத்தினை சென்றடைகின்ற பிரதான வடிகாலினைத் தூர்வாருகின்ற பணிகளும் நடைபெறுகின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை