சொக்லேற் கனவுகள் 37 - கோபிகை!!

 


'அனுதி......

நான் என்னடி செய்ய,

திடீரெண்டு படிப்பிற்காக

வெளிநாடு போவனெண்டு

எனக்கு தெரியாதே.....'


ஆதி 

சொல்லிக்கொண்டிருக்க,

முகத்தில் கோபத்தைக்

காட்டிக்கொண்டிருந்தாள்

அனுதி. 


'உன்னை நம்பித்தானே

இரத்ததான முகாமை

ஏற்பாடு செய்தம்...'.

கேள்விகேட்டாள் அனுதி.


'அதுசரி.....எனக்கு புரியுது,

நான் என்ன செய்ய?

அதுக்குத்தான்

என் நண்பனை ஏற்பாடு....'


அவன் முடிப்பதற்குள்

முறைத்தாள் அனுதி. 

இவனும் முறைக்கமுயன்று

தோற்றுச் சிரித்தான். 


மெல்ல எழுந்து 

அவளருகில் வந்தவன்,

'உனக்கு புரியாதா,

உன்னைவிட்டுப்போறது

சாதாரணமானதா' என்றான். 


கண்ணில் வலியோடு

அவன் கேட்க

துடித்துப் போன அனுதி

'இல்லை' என்பதாய்

தலையை ஆட்டினாள். 


'மனசைக் கல்லாக்கி

நான் பயிற்சிக்காக போறன்,

மூன்று மாசம்தானே, போயிடும்'

என்றான் தலைதடவியபடி. 


அவனைப் பிரியும் வலியை

நெஞ்சுக்குள் சுமந்தபடி

மௌனமாய் புன்னகைத்தாள்

அனுதி ......

இரத்ததான முகாம்

நடந்துகொண்டிருந்தது. 

அங்குமிங்கும்ஓடி ஓடி 

அனைத்தும் பார்த்தாள் அனுதி. 


கடைசியாகத்தான்

தோழியோடு சென்றாள். 

அவளுக்கான பரிசோதனைகள்

நடந்தன. 


திடீரென்று 

அவள் இரத்ததானம்

செய்யமுடியாதென்ற

வைத்தியர் ஆரூரனை 

கேள்வியோடு பார்த்தாள்

அனுதி. 


கனவுகள் தொடரும்

கோபிகை.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.