இளவரசர் ஹரி- மேகலுக்கு இரண்டாவது குழந்தை!

 


சசெக்ஸ் இளவரசர் மற்றும் சீமாட்டி தங்களது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.


கலிபோர்னியாவின் சாண்டா பார்பராவில் உள்ள மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை பெண் குழந்தை பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தாய் மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர் என்று தம்பதியினர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


உள்ளூர் நேரப்படி காலை 11:40 மணிக்கு பிறந்த இக்குழந்தை 7 பவுண்ட் 11oz எடை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த பெண் குழந்தைக்கு லிலிபெட் ‘லில்லி’ டயானா மவுண்ட்பேட்டன்- வின்ட்சர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.


இளவரசர் ஹரியின் தாயும் வேல்ஸ் இளவரசி டயானாவை கௌரவிப்பதற்காக இப்பெயர் வைக்கப்பட்டதாகவும், ‘லிலிபெட்’ என்பது குழந்தையாக இருந்தபோது ராணியின் புனைப்பெயர் எனவும் ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


வேல்ஸ் இளவரசர் மற்றும் கேம்பிரிட்ஜ் இளவரசர் ஆகியோரும் இந்த ஜோடியை சமூக ஊடகங்களில் வாழ்த்தினர்.


குழந்தை பிறந்ததாக அறிவித்ததை அடுத்து ராணி மகிழ்ச்சியடைகிறார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.


குழந்தை ராணியின் 11ஆவது பேரக்குழந்தை மற்றும் அரியணைக்கு வரிசையில் எட்டாவது இடத்தில் உள்ளார். இதன் பொருள் 1960இல் இரண்டாவது இடத்தில் பிறந்த இளவரசர் ஆண்ட்ரூ ஒன்பதாவது இடத்திற்கு முன்னேறுகிறார்.


ஏற்கனவே இளவரசர் ஹரி மற்றும் மேகல் ஆகியோருக்கு ஆர்ச்சி ஹாரிசன் மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் என்ற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.