ஒரே நாளில் ஓட்டமாவடியில் 8 பேருக்கு கொரோனா தொற்று!!
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் எட்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்ட நிலையில் ஓட்டமாவடி பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
இதன்போது கொரோனா தொற்றாளர்களுடன் முதல் தொடர்புடைய உறவினர்கள் என 27 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 08 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், எட்டு பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
குறித்த அன்டிஜன் பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதர் ஏ.எல்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை