நெல்லியடி வர்த்தக சங்கத்தின் முன்மாதிரி செயற்பாடு!!.

 


நெல்லியடி வர்த்தக சங்கத்தின் அனுசரணையுடன் காலத்தின் தேவையறிந்து தெரிவு செய்யப்பட்ட  மாணவர்களுக்கான இணையவழி கற்கை முறை செயற்பாட்டுக்கான 25GB ZOOM  வசதியுடனான SLT MOBITEL இலவச தொலைபேசி இணைப்புகள் (SIM CARD) வழங்கும் நிகழ்ச்சிச் திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


நேற்று யா/நெல்லியடி மெ.மி.த.கலவன் பாடசாலை, யா/மாணிக்கவாசகர் வித்தியாலயம்,  யா/விக்னேஸ்வரா கல்லூரி ஆகிய பாடசாலைகளில் 132 மாணவர்களுக்கு சுகாதார பாதுகாப்பு நடைமுறைக்கு அமைவாக வழங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 1000 மாணவர்களுக்கு இவ் இணைப்புகள் வழங்கப்படும். இந்நிகழ்வில் நெல்லியடி வர்த்தக சங்கத்தை சேர்ந்த அருள் மற்றும் நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள், SLT MOBITEL நிறுவன அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.